திரு. B.R. நாகமணி அவர்கள் ஓர் உணர்வாளர். நமக்குள் இருப்பது அந்த இறைவன் தான். நாம் உணர முடியும் என்ற வேத வாக்கின்படி அதை நன்கு உணர்ந்து, அந்த ஆனந்த நிலையை மற்றவர்களும் அடைய வேண்டும், அனைவரும் முக்தி அடைய வேண்டும் என்ற தனது லட்சியத்தில் விடாப்பிடியாக நின்று இன்றும் அந்த இறைப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

அவர் அடைந்த அந்த ஆனந்த நிலையில், அவருள் தோன்றிய தெய்வீகக் கவிதைகள்தான் இந்நூல் உருவாக அடிப்படை. மிகவும் எளிய நடைமுறையில் உருவாகிய இந்த தெய்வீகக் கவிதைகள் இறைவனே அவர் மூலம் வெளிப்படுத்தும் உண்மைநிலை.

இக்கவிதைகளை அனைவரும் படித்து அந்த ஆனந்த நிலையை அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து சமர்ப்பிக்கின்றோம்!

ஓம்! சாந்தி!

Hand



இருப்பின் இனிப்பு